ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்!

130 பயணிகளுடன் அபுதாபி சென்று கொண்டிருந்த அந்த விமானம் (AI 940) அதிகாலை 3.37 மணிக்கு பாகிஸ்தானின் மீது பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. அதன் சக்கரங்களை கீழே இறக்கும் ஹைட்ராலிக் சிஸ்டத்திலும் பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்தை விமானிகள் உடனடியாக தரையிறக்க பாகிஸ்தானிடம் அனுமதி கோரினர். உடனடியாக அனுமதி தரப்பட்டதையடுத்து தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
விமான நிலையம் எமர்ஜென்சி நிலைக்குக் கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. ஆனால், எந்த பிரச்சனையும் இன்றி விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.
Airbus 319 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தின் 3 ஹைட்ராலிக் சிஸ்டங்களும் சரிவர செயல்படதாததால் உடனடியாக அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் முடிவு செய்ததாகத் தெரிகிறது.
நவாப்ஷா விமான நிலையம் மிகச் சிறிய ஒன்றாகும். அங்கு விமானக் கோளாறுகளை சரி செய்ய வசதிகள் இல்லை. இதையடுத்து டெல்லியிலிருந்து ஏர் இந்தியா என்ஜினியர்களுடன் ஒரு விமானம் நவாப்ஷா விமான நிலையத்துக்கு அனுப்பப்படவுள்ளது.
அந்த விமானமே பயணிகளை அபுதாபி அல்லது மீண்டும் டெல்லிக்கு அழைத்து வரும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications