கள்ளத்தொடர்பு: பெண்ணை சுட்டுக் கொன்று வீடியோ வெளியிட்ட தாலிபான்கள்
காபுல்: ஆப்கானிஸ்தானில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 150 பேர் முன்னிலையில் வைத்து தாலிபான் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் 3 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் 150க்கும் மேற்பட்ட ஆண்கள் பார்க்க பர்வான் மாகாணத்தைச் சேர்ந்த தாலிபான் தீவிரவாதி முட்டிக் கால் போட்டிருக்கும் பெண் ஒருவர் அருகில் சென்று அவரது தலையில் 5 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காட்சி வருகிறது. அந்த பெண்ணைக் கொன்றதும் அங்கிருந்த ஆண்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர். ஆப்கானிஸ்தான் முஜாஹீதீன் வாழ்க என்று கோஷமிடுகி்ன்றனர்.
இந்த வீடியோவைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பெண் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி அவரைக் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இது குறித்து பர்வான் மாகாண ஆளுநர் பசீர் சலாங்கி கூறுகையில்,
இந்த வீடியோ ஒரு வாரத்திற்கு முன்பு ஷின்வாரி மாவட்டத்தில் உள்ள கிம்சோக் கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பாத்தவுடன் நான் எனது கண்களை மூடிக் கொண்டேன். அந்த பெண் மீது தவறில்லை. தாலிபான்கள் மீது தான் தவறு உள்ளது. அவர்கள் சட்டத்தை மதிக்காதவர்கள், கொலைகாரர்கள், காட்டு மிராண்டிகளைப் போன்று அந்த பெண்ணைக் கொன்றுள்ளனர்.
2 தாலிபான் கமாண்டர்கள் அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தனர். அந்த இருவருக்கும் உள்ள பிரச்சனையைத் தீர்க்க அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி கொல்ல முடிவு செய்தனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications