பிராந்திய இடஒதுக்கீட்டை கண்டித்து புதுவையில் இன்று முழு அடைப்பு
புதுச்சேரி: பிராந்திய இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.
புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு பி்ராந்திய ஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. இந்த இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. மேலும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சேர்ந்து பிராந்திய இடஒதுக்கீடு போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
பிராந்திய இடஒதுக்கீடு முறையை எதிர்த்து இன்று முதல் வரும் 13ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்த அமைப்பு அறிவித்தது. இதையடுத்து முதல்வர் ரங்கசாமி போராட்டக் குழுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் 3 நாள் போராட்டத்தை ஒரு நாளாகக் குறைத்துக் கொள்ள போராட்டக்குழு முடிவு செய்தது.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் துவங்கியது. இந்த போராட்டம் மாலை 6 மணி வரை நடக்கும். முழு அடைப்பு போராட்டம் காரமணமாக வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள், ஆட்டோ போன்ற வாகனங்கள் ஓடவில்லை. மேலும் மாநிலத்தில் உள்ள சில பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. விடுமுறை அறிவிக்காத பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துள்ளனர்.
இந்த போராட்டத்தால் புதுச்சேரி ரோடுகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications