ஆடி அமாவாசை: குற்றாலம், பாபநாசத்தில் குவிந்த மக்கள்
குற்றாலம்: குற்றாலத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தார்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் அதிகாலையிலேயே குவிந்தனர். மெயினருவியில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.
முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களுக்கு மோட்சம் கிடைப்பதற்காகவும் ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள் குற்றாலம், ராமேஸ்வரம், பாபநாசம், உள்ளிட்ட புன்னிய தலங்களுக்கு சென்று எள்ளையும், தண்ணீரையும் ஆற்றில் விட்டு முன்னோர்களின் விருப்ப பொருட்கள், அரிசி, காய்கறி தானியங்களை அர்ச்சகர்களுக்கு தானமாக வழங்கியும் தர்ப்பணம் செய்வது வழக்கம்.
புன்னிய தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் தற்போது சீசன் சமயம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் அருவி பகுதியில் குவிந்தனர். அருவிக்கரையில் வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர், நட்சத்திரம் போன்ற விபரங்களை கூறி எள்ளும், தண்ணீரும் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். அதிக கூட்டம் காரணமாக மெயினருவியில் சுற்றுலாப் பயணிகளும், தர்ப்பணம் கொடுத்தவர்களும் நீண்டவரிசையில் காத்திருந்து குளித்தனர்.
இதே போல் பாபநாசம் சிவன்கோவில் முன்பு உள்ள தாமிரபரணி நதிக்கரையில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தனர். நெல்லை வண்ணாரப்பேட்டை, குறுக்குதுறை, தாமிரபரணி ஆற்றங்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications