For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க கோர்ட்டில் இன்று தண்டனை அறிவிப்பு... நித்தியானந்தாவுக்கு ஏதாவது கிடைக்குமா?

Google Oneindia Tamil News

Nithyanantha
சென்னை: அமெரிக்காவின் கலிபோர்னியா கோர்ட்டில் நித்தியானந்தா தியான பீடத்தின் மோசடிகள் தொடர்பான வழக்கில் இன்று தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. இதனால் நித்தியானந்தா தரப்பு படபடப்புடன் உள்ளது.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நித்தியானந்தாவின் அத்தனை மடங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி அங்கு வசிக்கும் இந்திய அமெரிக்கர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியா மாகாண கோர்ட், நித்தியானந்தா தியான பீடங்கள் அனைத்தும் மோசடியானவை, பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளன என்று தீர்ப்பளித்துள்ளது.

இன்று இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. கைது நடவடிக்கைக்கு உத்தரவிடப்படுமா என்பதும் இன்றே தெரிய வரும். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக நித்தியானந்தாவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் நித்தியானந்தாவும் அவரது ஆதவராளர்களும் பீதியில் உள்ளனர். நித்தியானந்தா மீது கைது நடவடிக்கை பாயுமா அல்லது அபராதம் விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நித்தியானந்தாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் மதுரை அதீனத்திடம் கேட்டபோது தண்டனை விதிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்வேன் என்று அவர் கூறியிருக்கிறார். எனவே நித்தியானந்தா தரப்பு இதுகுறித்தும் அச்சத்துடன் உள்ளது.

English summary
US court to pronounce sentence details in Nithyanantha case today. California court has already convicted the Ntihyanantha's Dhyana peetams as fraud organisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X