For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் உடல் என நினைத்து செக்ஸ் பொம்மையுடன் போராடிய சீன போலீசார்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் ஆற்றில் மிதந்து வந்த பெண் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அதனை மீட்டனர். பின்னர் அது பெண் அல்ல செக்ஸ் பொம்மை என்று தெரிந்த உடன் நிம்மதியடைந்தனர்.

சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள வென்டெங் என்ற இடத்தில் பாலத்தின் அடியில் ஆற்றில் பெண் உடல் ஒன்று மிதந்து வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து 18 போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் ஏராளமான மக்கள் பாலத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டிவி கேமராமேன்களும் அங்கு குவிந்தனர். ஆற்றில் மிதந்து வந்த பெண் பற்றி யூகங்கள் அடிப்படையில் டிவி நிருபர் ஒருவர் கேமராவில் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார். இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் பெண் உடலை மீட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அது பெண் உடல் அல்ல செக்ஸ் பொம்மை. அதனை பயன்படுத்திவிட்டு யாரோ ஆற்றில் தூக்கிப்போட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த போலீசார் "ஆற்றில் மிதந்து வந்த பொம்மை, பார்ப்பதற்கு அசல் பெண் உடல் போலவே இருக்கிறது. அதனால் குழப்பம் ஏற்பட்டு விட்டது என்றனர்.

சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில்தான் செக்ஸ் பொம்மைகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தவறாக செய்தி ஒளிபரப்பிய சீன டிவி நேயர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. எங்களுடைய நிருபர் சிறிய வயதைச் சேர்ந்தவர் எனவே தவறு நேர்ந்து விட்டது. மக்களின் அசவுகரியத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று இணையதளத்திலும் செய்து வெளியிட்டுள்ள அந்த டிவி சேனல்.

English summary
Eighteen policemen recently struggled for an hour in a river to recover what was initially mistaken for a woman's body, but turned out to be an inflatable sex toy at Wendeng in eastern China's Shandong province.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X