சென்னை இறக்குமதி நிறுவனத்தில் சி்பிஐ ரெய்ட்: ரூ.130 கோடி மதிப்பு 400 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க இறக்குமதி நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தங்க இறக்குமதி நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்திற்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மத்திய அரசின் உலோக வணிக கழகம் மூலம் அந்நிறுவனம் இறக்குமதி செய்த தங்கம் குறித்து ஆய்வு நடத்தினர்.
அந்த ஆய்வில் தங்கம் இறக்குமதி செய்ததில் ரூ.18 கோடி ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஊழலுக்கு சில அதிகாரிகளும் துணைபோனதும் தெரிய வந்தது.இதையடுத்து கடந்த மாதம் அந்நிறுவனம் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அந்நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.130 கோடி மதிப்புள்ள 400 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இது தவிர கணக்கில் காட்டப்படாமல் வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications