For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவி இறந்த விவகாரத்தை கொலை வழக்காக ஏன் மாற்றக் கூடாது? : தலைமை நீதிபதி கேள்வி

By Mathi
Google Oneindia Tamil News

Shruthi
சென்னை: சென்னை பள்ளி மாணவி ஸ்ருதி இறந்த விவகாரத்தை கொலை வழக்காக ஏன் மாற்றக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் கேள்வி எழுப்பியுள்ளார்.

பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே மாணவி விழுந்து இறந்த வழக்கில் இன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையில் பள்ளிக் கல்விச் செயலர், போக்குவரத்து செயலர் ஆகியோர் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.

இந்த விசாரணையின் போது மாணவி ஸ்ருதி சென்ற வாகனம் குறைபாடனதாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட பேருந்தை சரிபார்க்காமல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ருதியின் மரணத்தை ஏன் கொலை வழக்காகப் பதிவு செய்யக் கூடாது ? என்று தலைமை நீதிபதி இக்பால் கேள்வி எழுப்பினார்.

மேலும் பள்ளிப் பேருந்துகளின் பாதுகாப்பு பற்றிய புதிய விதிகளை ஒருவாரத்தில் வகுக்கவும் தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு 2 வார கால அவகாசம் கேட்டார். இதனை நிராகரித்த தலைமை நீதிபதி, அவசர அவசியம் கருதி ஒருவார காலத்துக்குள் புதிய பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.அத்துடன் அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்பது வெறும் கண்துடைப்பாக இருந்துவிடக் கூடாது என்றும் அவர் கூறினார். குறிப்பாக தவறு செய்யும் மோட்டார் வாகன அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யும் வகையில் தமிழக அரசின் புதிய விதிகள் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

உயிரிழந்த சிறுமி ஸ்ருதியின் பெற்றோருக்கு சீயோன் பள்ளி நிர்வாகம் ரூ50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி இக்பால் தமது உத்தரவில் கூறியுள்ளார்.

English summary
Madras High court has ordered on today to the Tamil Nadu Government Should creat new safety rules within week for School Buses in Sruthi case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X