நித்தியுடன் வர திட்டமிட்ட மதுரை ஆதீனத்தை சந்திக்க மறுத்த தர்மபுரம் ஆதீனம்!
திருத்துறைப்பூண்டி: நித்யானந்தா குறித்து பதில் கூறி சலித்து விட்டது. எனவே அவர் குறித்து கேள்வி கேட்காதீர்கள் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கச்சனம் கைக்கினேஸ்வரர் கோவிலுக்கு வந்த ஆதீனம் நிருபர்களிடம் கூறுகையில்,
வட இந்திய புனித யாத்திரைக்குச் செல்லும் இந்துக்களுக்கு மாநில அரசு சலுகைகள் அறிவித்துள்ளதை பாராட்டுகிறோம். கோவில் சன்னிதானத்தில் ஏழை, பணக்காரன், நடுத்தர வர்க்கம் என்ற பாகுபாடு இல்லை. ஆனால் தரிசனக் கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்வதை அரசு ரத்து செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் காலத்தோடு மழையும் பெய்யாத நிலையில் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்று திருவையாறில் திருஞானசம்பந்தர் மழை பெய்வதற்காக பதிகம் பாடியுள்ளார். அப்பதிகத்தை பாடி கூட்டு வழிபாடு நடத்தினால் மழை பொழியும் என்று 'பொதுவாக'ப் பேசினார்.
இதையடுத்து அவரிடம், மயிலாடுதுறையில் இருக்கும் தர்மபுரம் ஆதீனத்தை ஏன் நீங்கள் சென்று நேரில் சந்திக்கவில்லை? என்ற கேட்டதற்கு, மே 5ம் தேதி அவரை நான் சந்திக்க அனுமதி கொடுத்தார். ஆனால் நித்யானந்தாவுடன் வந்தால் அனுமதியில்லை என மறுத்துவிட்டார். இதனால் சந்திக்கவில்லை. காலம் நேரம் வரும்போது நல்ல செய்தியை கூறுவேன் என்றார்.
நித்யானந்தா குறித்த உங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் உண்டா? என்று கேட்டதற்கு, இது குறித்து பதில் கூறி, பதில் கூறியே சலித்து விட்டது. அது குறித்து எதுவும் கேள்விகள் கேட்க வேண்டாம் என்று எஸ்கேப் ஆனார்.
கைலாயத்தில் உள்ள நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவை உடன் அழைத்துச் சென்றது எனக்குத் தெரியாது என சில நாட்களுக்கு முன் ஆதீனம் கூறியது நினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications