ராஷ்டிரபதி பவனில் 'சீட்' மறுக்கப்பட்ட பாஜக தலைவர்கள்-அத்வானியிடம் மன்னிப்பு கேட்டார் பிரணாப்

சுதந்திர தினத்தன்று ராஷ்டிரபதி பவனில் விழா நடைபெற்றது. விலாஸ்ராவ் தேஷ்முக் மறைவு காரணமாக முதலில் இது ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இருப்பினும் பின்னர் நடைபெற்றது.
ராஷ்டிரபதி பவனில் உள்ள புகழ் பெற்ற முகல் கார்டனில் நடந்த இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். அனைவரும் அமர்ந்து குடியரசுத் தலைவருடன் பேசுவதற்காக சீட்கள் போடப்பட்டிருந்தன.
ஆனால் பாஜக தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோருக்கு சீட் தரப்படவில்லை. இதனால் அவர்கள் நின்று கொண்டே இருந்தனர்.
இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அத்வானியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்த தவறு. வேண்டும் என்றே பாஜக தலைவர்களை அவமதிக்கவில்லை என்று தெரிவித்தார் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவர் மாளிகையில் அத்வானிக்கு இப்படி அவமரியாதை நேருவது இது 2வது முறையாகும். ஏற்கனவே குடியரசுத் துணைத் தலைவர் அன்சாரியின் பதவியேற்பின்போது அத்வானிக்கு 4வது வரிசையில் சீட் போட்டிருந்தனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு கள்ளத்தனமான அரசு என்று லோக்சபாவில் அத்வானி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது. அதன் பிறகுதான் இப்படி அத்வானியை அவமானப்படுத்தும் வேலைகள் நடப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications