6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: கல்வித்துறை செயலாளராக டேவிதார்
சென்னை: தமிழக உயர் கல்வித்துறையின் சிறப்புச் செயலாளராக பி.டபிள்யூ.சி. டேவிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தலைமைச் செயலாலர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்ட உத்தரவில்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (சிவில் சப்ளை) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பி.டபிள்யூ.சி. டேவிதார் மாற்றப்பட்டு, உயர் கல்வித்துறையின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், உயர் கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளரின் ஒட்டுமொத்த மேற்பார்வையின் கீழ் செயல்படுவார்.
சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் (பணிகள்) ஆர்.அனந்தகுமார் மாற்றப்பட்டு, சென்னை மாநகராட்சி மண்டல இணை கமிஷனராக (தெற்கு) நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
பொதுத்துறை (மரபு சீர்முறை) துணை செயலாளர் டி.பி.ராஜேஷ் மாற்றப்பட்டு, பேரூராட்சிகளின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் பி.செந்தில்குமார் மாற்றப்பட்டு, பொதுத்துறை (மரபு சீர்முறை) துணை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை முன்னாள் துணை செயலாளர் பிரஜேந்திரா நவ்நித், சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனராக (பணிகள்) நியமிக்கப்பட்டு உள்ளார். பேரூராட்சிகளின் இயக்குனர் எம்.சந்திரசேகரன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications