திருவண்ணாமலையில் மின் கம்பி அறுந்து விழுந்து 2 பெண்கள் பலி-6 பேர் காயம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மழையில் அறுந்து விழுந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்த 2 பெண்கள் பலியாகினர். மேலும் 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதில் நேற்று பெய்த மழையில் தானிப்பாடியை அடுத்த நாவாக்கொள்ளை அருகே இருந்த டிரான்ஸ்பார்மரின் மின் ஒயர் அறுந்து விழுந்தது. இது குறித்து அப்பகுதியினர், மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் மின்சார வாரியத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நாவாக்கொள்ளை அருகே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இன்று காலை 10 மணியளவில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்போது பணியில் ஈடுபட்ட 8 பணியாளர்கள் நேற்று அறுந்து கிடந்த மின் ஒயர் மீது தெரியாமல் மிதித்தனர்.
இதில் பரமேஸ்வரி, தமிழ்செல்வி ஆகிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மற்ற 6 பேரும் படுகாயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மின் வாரியத்தின் மீது அதிருப்தி அடைந்த அப்பகுதியினர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும், மின் வாரிய அதிகாரிகளும், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
-
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications