சுதந்திர தினத்தில் கூடங்குளத்தில் கருப்பு கொடி- உதயக்குமார், 2000 பேர் மீது வழக்கு
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடி வரும் குழுவினர், நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கருப்பு கொடி ஏற்றி, சவபெட்டி ஊர்வலம் சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்ட குழுவை சேர்ந்த உதயக்குமார் உட்பட 2 ஆயிரம் பேர் மீது கொடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து, கடந்த ஒரு வருடமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாலையில் தேசிய கொடிக்கு பதிலாக போராட்ட குழுவினர் கருப்பு கொடி ஏற்றி, சவபெட்டியுடன் ஊர்வலம் சென்றனர்.மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டன. இடிந்தகரை தேவாலயத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தை குறித்து, விஜயாபதி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமரன், கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை அவமரியாதை செய்து, கருப்பு கொடி ஏற்றி ஊர்வலம் சென்றது தொடர்பாக, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார், தலைவர் புஷ்பராயன், பாதிரியார் மில்டன் உட்பட மொத்தம் 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இடிந்தகரை தேவாலயத்தின் வளாகத்தில் அனுமதி இல்லாமல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் மீது தினமும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் துவங்கி இன்றோடு ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து போராட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் அரசியல் தலைவர்களை அழைத்து போராட்ட கூட்டத்தில் பேச வைக்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால் கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், போராட்டத்திற்கு ஆதரவாக பேச வரும் அரசியல் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications