ஐ.நாவுக்கு டெசோ தீர்மானங்கள்: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கி.வீரமணி விளக்கம்

திமுக தலைமையிலான டெசோ அமைப்பின் மாநாடு சென்னையில் நடந்தது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈழத் தமிழர்கள் மத்தியில் ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அதில் ஒன்று. இருப்பினும் தமிழ் ஈழம் உருவாக்க வேண்டும் என்று எந்தத் தீர்மானத்திலும் கூறப்படவில்லை.
இந்த நிலையில் இந்தத் தீர்மானங்களை ஐ.நா.வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. பொதுச் சபை, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.
கி.வீரமணி கருத்து
இந்த நிலையில் தி.க. தலைவரும், டெசோ தலைவர்களில் ஒருவருமான கி.வீரமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது,
தமிழ்நாடு முழுவதும் ‘டெசோ' தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் ஆகஸ்டு 20 முதல் 30 வரை நடக்கும் என்று ‘டெசோ' தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதில் ‘டெசோ'வின் உறுப்பினர்களாக உள்ள கட்சியினரும் கலந்து கொள்வார்கள்.
டெசோ மாநாட்டுத் தீர்மானம் ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். மாநாட்டின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அலறுவதே போதுமானது. இன்றைய நாளேடுகளில் அது பற்றிய செய்தியும் வெளிவந்துள்ளது.
டெசோ மாநாட்டைத் தடை செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட தமிழ்நாடு முதல்வரே சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றும்போது கூட ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பேசவேண்டிய அளவிற்குத் தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது என்றார் கி.வீரமணி,
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications