பூனையை உயிரோடு ஓவனில் வைத்து சமைக்க முயன்ற 8 வயது சிறுவன்!
கென்ட்: இங்கிலாந்தை சேர்ந்த 8 வயது சிறுவன், பக்கத்து வீ்ட்டு பூனையை பிடித்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சமைக்க முயன்று பிடிபட்டுள்ளான்.
இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரில் உள்ள ரோசிஸ்டர் என்ற ஊரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் 8 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். அவன் வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டு பூனையை பிடித்து மைக்ரோவேவிற்குள் அடைத்து, சமைக்க முயன்றான்.
இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் வசித்து வந்த பூனையின் உரிமையாளர், கீழ்தளத்திற்கு எதார்த்தமாக சென்ற போது தான், 8 வயது சிறுவனின் குறும்பு நடவடிக்கை தெரியவந்தது.
இதையடுத்து பூனையை மீட்ட உரிமையாளர், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பூனைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பூனை தற்போது உயிரோடு இருந்தாலும், இதன் சில உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மிருக வதை தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார், சிறுவனிடம் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து மிருத வதை தடுப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் ரே பெய்லி கூறுகையில், இது போன்ற கொடூர செயலில் ஒரு சிறுவன் ஈடுபட்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்றார்.
சிறுவனுக்கு 10 வயது கூட பூர்த்தியாகாத நிலையில், அவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications