For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈமு கோழி மோசடி: அத்தனை பேருக்கும் பணம் திரும்பக் கிடைக்கும்-ஜெ.உறுதி

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ஜெயலலிதா ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் முதலீட்டளர்களிடம் பணத்தை வசூல் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளவர்களை உடனடியாக கைது செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஈமு கோழி நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அதனை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போதுள்ள ஈமு கோழிகளை தீவனம் வழங்கி பராமரிக்க கால்நடைத்துறைக்கு உத்தரவிட்ட முதல்வர், அவை மூன்று மாதங்கள் கழித்து பெரிய கோழிகள் ஆனதும் அவற்றை விற்று தீவன செலவுக்கு ஈடு செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்யும் முன் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
Chief Minister Jayalalitha has assured the people who were cheated by Emu firms that they will get back their money invested in those fraud firms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X