For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணீர் மூச்சுக்குழாயில் புகுந்து மூச்சுத் திணறி இறந்தான் ரஞ்சன்-நீச்சல் பயிற்சியாளர் வாக்குமூலம்

Google Oneindia Tamil News

Padma Seshadri School Swimming pool
சென்னை: மாணவன் ரஞ்சனின் மூச்சுக் குழாய் வழியாக நீச்சல் குள தண்ணீர் புகுந்ததால் அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவனுக்கு நாங்களே முதலுதவி சிகிச்சை அளித்தோம். பி்ன்னர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம் என்று பத்மா சேஷாத்திரி பள்ளி நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

செனனை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூடத்தில் 4வது வகுப்பு படித்து வந்த மாணவன் ரஞ்சன் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர் ராஜசேகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் கே.கே.நகர் போலீஸார் விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் புழல்சிறையில் அடைத்தனர்.

போலீஸாரிடம் ராஜசேகர் அளித்த வாக்குமூலத்தில், மாணவன் ரஞ்சனுக்கு நீச்சல் பயிற்சியின் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மூச்சுக் குழாயில் தண்ணீர் புகுந்து விட்டது. இதைத் தொடர்ந்து நான் மாணவனுக்கு முதலுதவி அளித்ததேன். அதன் பின்னர் மருத்துவமனைக்கு சிககிச்சைக்காக எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

ராஜசேகர் தவிர நீச்சல் குள ஒப்பந்ததாரர் ரங்காரெட்டி, பயிற்சி உதவியாளர் அருண்குமார், தண்ணீர் சுத்திகரிப்பாளர் ரவி, உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோரும் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Swimming coach of Chennai Padma seshadri school swimming coach has said that Ranjan died of suffocation in swimming pool.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X