கிரானைட் கொள்ளை வழக்கில் மற்றொரு அதிபர் சரண் - மு.க. அழகிரி மகன் தொடர்ந்தும் தலைமறைவு
மதுரை: கிரானைட் கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மதுரா கிரானைட் நிறுவன உரிமையாளர் பன்னீர் முகமது மதுரையில் எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார்.
தமிழ்நாட்டை உலுக்கியுள்ள கிரானைட் கொள்ளை வழக்கில் பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி, பன்னீர் முகமது, மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்டோரை போலீசார் தேடிவந்தனர். இவர்களில் பழனிச்சாமி போலீசில் சரணடைந்துள்ளார். பழனிச்சாமியை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இதையடுத்து அவர் தற்போது போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் மதுரா கிரானைட் அதிபர் பன்னீர் முகமது நேற்று மாலை 6 மணிக்கு மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி.மயில்வாகனன் முன்பு சரண் அடைந்தார். இவரது கிரானைட் நிறுவனம் கீழையூரில் உள்ளது. சரணடைந்துள்ள பன்னீர் முகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இவரும் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட இருக்கிறார்.
இந்த வழக்கில் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் இன்னமும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இவர்களது பாஸ்போர்ட்டுகளை முடக்க மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications