For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவை கேலி செய்து டிஜிட்டல் பேனர்: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார்

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் முதல்வர் ஜெயலலிதாவை கேலி செய்து டிஜிட்டல் பேனர் வைத்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜாவைக் கண்டித்தும், அந்த பேனரை அகற்றக் கோரியும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். மேலும் மாலைராஜா உள்பட 4 பேர் மீது போலீசில் புகார் கொடுத்தனர்.

டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் இன்று மாலை நடக்கிறது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அவரை வரவேற்று நெல்லையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர். பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா சார்பில் ஒரு டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் முதல்வர் ஜெயலலிதாவை கேலி செய்து கார்ட்டூன் படம் உள்ளது.

அந்த பேனரைப் பார்த்த அதிமுகவினர் கடுப்பாகி அதை உடனே அகற்றக் கோரி பாளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் நேற்று காலை வரை அந்த பேனர் அகற்றப்படவில்லை. இதையடுத்து நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பரமசிவன், மாநகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பரணி சங்கரலிங்கம் தலைமையிலான அதிமுகவினர் மாலைராஜாவை சந்தித்து அந்த பேனரை அகற்றுமாறு தெரிவித்தனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவர்கள் அந்த பேனரை அகற்றக் கோரி வண்ணார்பேட்டையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பேனரை அகற்ற முயன்றனர். ஆனால் அதை அகற்றவிடாமல் மாலைராஜா சாலையில் அமர்ந்து ரகளை செய்தார். இதையடுத்து அதிமுகவினர் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு போலீசார் சர்ச்சைக்குரிய பேனரை அகற்றினர். பின்னர் காவல் நிலையம் சென்ற அதிமுகவினர் மாலைராஜா உள்ளிட்ட 4 பேர் மீது புகார் கொடுத்தனர்.

English summary
ADMK men gave a complaint against 4 persons including former DMK MLA Malairaja for keeping a banner carrying a funny cartoon of CM Jayalalithaa. This banner was kept in Palayamkottai which was later removed by police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X