மீண்டும் வைரலாகும் தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்! சீமானை தோற்கடிக்கும் பிரபுக்கு என்ன துறை?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவெக முன்னிலை வகித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான உத்தேச அமைச்சரவை பட்டியல் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தவெக 108 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதாவது திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு விஜய் கட்சி வேகமாக முன்னேறி வருகிறது.

2026 சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் "விஜய் அலை" வீசி வருகிறது. 35% வாக்கு சதவீதத்துடன் 108 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய சூழலில், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ரவி கணித்தது போல தவெக 121 இடங்களை நெருங்கி வருவதால், பனையூர் அலுவலகத்திலும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டிலும் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
ஆட்சி அமைக்க உரிமை: 118 என்ற பெரும்பான்மை இலக்கை தவெக எட்டும் பட்சத்தில், இன்று மாலை அல்லது நாளை காலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அக்கட்சித் தலைவர் விஜய் உரிமை கோருவார் எனத் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு என்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல் என ஒன்று வெளியானது. அதில்
கட்சித் தலைமையால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், கீழ்க்கண்ட பெயர்கள் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்சியின் தலைவர் விஜய்க்கு உள்துறை, மகளிர் மற்றும் பெண்கள் நலத் துறை. செங்கோட்டையனுக்கு பொதுப் பணித் துறை, ஆதவ் அர்ஜுனாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத் துறை, ஆனந்துக்கு போக்குவரத்து துறை, அருண்ராஜுக்கு உணவுத் துறை, மரிய வில்சனுக்கு உயர் கல்வித் துறை, காரைக்குடி பிரபுவுக்கு பால்வளத் துறை என குறிப்பிடப்பட்டிருந்தது.
பெண்களுக்கு 41% ஆதரவு கிடைத்துள்ளதால், அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
திமுக - அதிமுக அதிர்ச்சி: பல ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டு வந்த திராவிடக் கட்சிகள், தவெக-வின் இந்த அசுர வளர்ச்சியால் அதிர்ச்சியில் உள்ளனர்.
வாக்கு வித்தியாசம்: பல தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே முன்னிலை இருப்பதால், தவெக தரப்பினர் மிகுந்த எச்சரிக்கையுடன் வாக்கு எண்ணிக்கையைக் கண்காணித்து வருகின்றனர்.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கை முழக்கத்துடன் களம் கண்ட தவெக, தமிழக மக்களின் 'மாற்றம்' என்ற கோரிக்கையை வாக்குகளாக அறுவடை செய்துள்ளது. விஜய் முதல்வராகப் பதவியேற்கும் தருணத்தைக் கொண்டாட மாநிலம் முழுவதும் தவெக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications