சார்லஸின் அப்பா செஞ்ச வேலையைப் பார்த்தீங்களா...!

Subscribe to Oneindia Tamil

Philip and Pat Kirkwood
லண்டன்: இளவரசர் சார்லஸ், ராணி எலிசபெத்தின் வயிற்றில் இருக்கும்போது அந்தக் காலத்தின் பிரபல நடிகையான பாட் கிர்க்வுட்டுடன் ஜோடி சேர்ந்து செம ஆட்டம் போட்டாராம் ராணி எலிசபெத்தின் கணவரான பிலிப். இதுதொடர்பான சுவாரஸ்ய விஷயங்களைச் சேர்த்து ஒரு இசை நடன நிகழ்ச்சி லண்டனில் நடக்கப் போகிறதாம்.

இங்கிலாந்து ராணியின் குடும்பம் குறித்த ஏதாவது ஒரு செய்தியைப் போடாவிட்டாலும் கூட இங்கிலாந்து மீடியாக்களுக்கு தலையைக் குடைய ஆரம்பித்து விடும். இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் குறித்து அவ்வப்போது ஏதாவது செய்திகள் வருவது வழக்கம். வழக்கமாக அவரது இன்வெறிப் போக்கு குறித்துதான் நிறைய செய்திகள் வரும். ஆனால் இந்த முறை அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

இது நமக்குத்தான் புதிய செய்தி. ஆனால் இங்கிலாந்து மக்களுக்கு ரொம்பப் பழைய செய்தி. இருப்பினும் முன்பு நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை இப்போது புதிதாக இங்கிலாந்து மக்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிலிப்புக்கும், அந்தக் காலத்தில் பிரபலமான நடிகையான பாட் கிர்க்வுட்டுக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்தது என்பது இங்கிலாந்து மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் இந்த நட்பின் ஆழம் குறித்து யாருக்குமே முழுமையாக தெரியாது. பழக்கம் உண்டு என்ற அளவில்தான் அவர்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் இந்த இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாட்டுக்கு, பிலிப் எழுதிய பல ரகசிய கடிதங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி, பிலிப்பையும், ராணி எலிசபெத்தையும் டென்ஷனாக்கியுள்ளன. அதை விட கொடுமையாக, இந்த கடித விவரங்களை வைத்து ஒரு நாட்டிய நாடகத்தையும் லண்டனில் அரங்கேற்றப் போகிறார்களாம்.

பிலிப் கையெழுத்தில் உள்ள இந்தக் கடிதங்கள் அனைத்தும் பால்மோரல் மற்றும் சான்டிங்காம் ஆகிய இடங்களிலிருந்து பாட்டுக்கு அனுப்பப்பட்டவை ஆகும். அவரது தனிப்பட்ட டைரித் தாள்களிலிருந்து இவற்றை எழுதி அனுப்பியுள்ளார் பிலிப்.

இந்த இடத்தில் பாட் குறித்து ஒரு வார்த்தை சொல்லியாக வேண்டும். அந்தக் காலத்தில் மிகப் பெரிய அழகியாக போற்றப்பட்டவர் பாட். இவரது கால்களை, உலகின் எட்டாவது அதிசயம் என்று அப்போதைய எழுத்தாளர் கென்னத் டைனன் புகழ்ந்து தள்ளியுள்ளார். அவ்வளவு அழகான, கவர்ச்சிகரமான கால்களுடன் வலம் வந்தார் பாட்.

1948ம் ஆண்டு தனது 27வது வயதில் முதல் முறையாக பாட்டை சந்தித்தார் பிலிப். அப்போது பாட்டுக்கும் கூட 27 வயதுதான். இருவரும் லண்டன் நைட் கிளப் ஒன்றில், இரவில் ஜோடியாக சேர்ந்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர். முகத்துடன் முகம் உரசியபடி இருவரும் ஆடிப் பாடியதை அப்போதே பலரும் கிசுகிசுத்தனர். அந்த சமயத்தில் ராணி எலிசபெத்தின் வயிற்றில் 8 மாத சிசுவாக இருந்தார் இளவசர் சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டான்ஸ் குறித்து பல வருடங்களுக்கு இங்கிலாந்து மீடியாக்கள் மாய்ந்து மாய்ந்து எழுதின. இருப்பினும் இருவருக்கும் இடையிலான உறவின் ஆழம் குறித்து அவர்களால் அறிய முடியவில்லை.

2007ம் ஆண்டு தனது 86வது வயதில் இறந்து போனார் பாட் கிர்க்வுட்.

தற்போது பாட்டுக்கு பிலிப் எழுதிய கடிதங்கள் மைக்கேல் தார்ன்டன் என்ற இங்கிலாந்து ராஜவம்சம் குறித்த நூல்களை எழுதியவரிடம் உள்ளதாம்.

தற்போது பிலிப், பாட் இடையிலான உறவு குறித்த நாட்டிய நாடகத்தில், பாட் வேடத்தில் ஜெஸ்ஸிகா வாக்கர் நடிக்கப் போகிறார்.

பிலிப்புடனான தனது உறவு குறித்து மீடியாக்கள் எழுதியபோதெல்லாம் தன்னைக் காக்க பிலிப் முயலவில்லை, தன்னைக் கைவிட்டு விட்டார் என்று பலமுறை வருத்தம் தெரிவித்திருந்தார் பாட் என்பது நினைவிருக்கலாம். கடைசி வரை அந்த வருத்தத்துடனேயே அவர் இருந்ததாக ஜெஸ்ஸிகா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+