திருப்பதியில் ஒரு விஐபி சிபாரிசு கடிதத்திற்கு இனி ஒரு அறை மட்டுமே ஒதுக்கீடு
திருப்பதி: திருப்பதி திருமலையில் இனி ஒரு விஐபி சிபாரிசு கடிதத்திற்கு ஒரு அறை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்டும் என இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்யும் சி.ஆர்.ஓ. அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கும் அறைகள் எடுக்கையில் அவர்களின் கைரேகை பதிவு செய்யப்படும். புதிதாக ஒரு பக்தர் இன்று அறை எடுத்தால் மீண்டும் அவர் 30 நாட்களுக்கு பிறகே மீண்டும் அறை எடுக்க முடியும். இடைத்தரகர்களை தடுக்கும் நோக்கில் தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
மேலும், திருமலையில் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஒரு விஐபி சிபாரிசு கடிதத்திற்கு ஒரு அறை மட்டுமே ஒதுக்கப்பட உள்ளது. பிறகு அதே விஐபியின் சிபாரிசு கடிதத்தை வேறு ஒரு பக்தர் கொண்டு வந்தால் அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இதனால் அறைகள் எடு்க்க நீண்ட நேரம் காத்திருக்கும் சாதாரண பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு 450 அறைகள் வரை கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
பக்தர்களின் வசதி கருதி கோவில் நிர்வாகம் இது போன்ற அதிரடி முடிவு எடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு பக்தர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.












Click it and Unblock the Notifications