தற்கொலை செய்ய தேவைப்பட்ட பணத்திற்காக வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 14 வயது ரஷ்ய சிறுமி கைது
மாஸ்கோ: தற்கொலை செய்து கொள்ள தேவையான பணத்திற்காக, முகமூடி அணிந்து வந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 14 வயது சிறுமியை போலீசார் கைது செய்தனர்.
ரஷ்யாவில் உள்ள இஷ்கெவ்ஸ்க் மாகாணத்தில் உள்ள உரால்ஸ் நகரில் ஒரு வங்கி உள்ளது. இங்கு வெள்ளை முகமூடி அணிந்து கொண்டு கையில் கத்தியுடன் நுழைந்த சிறுமி ஒருவர், வங்கி ஊழியர்களை மிரட்டி பணத்தை தருமாறு கூறினார்.
அப்போது வங்கியில் இருந்து பாதுகாப்பு ஊழியர்கள், சிறுமியை சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, வங்கியில் கொள்ளையடித்து விட்டு அந்த பணத்தில் வெளியூருக்கு சென்று தற்கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறியதாவது,
நகரின் முக்கிய பகுதியில் விறுவிறுப்பாக இயங்கி வரும் வங்கியினுள் நுழைந்த 14 வயதுள்ள சிறுமி கத்தி காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவளை பிடித்தனர். அப்போது எனக்கு 6,200 டாலர்கள் கொடுத்தால் போதும் என்று சிறுமி அலறியுள்ளார்.
கொள்ளையடிக்க முயன்ற சிறுமியின் தாயார் விவாகரத்து செய்த பிறகு வேறொருவரை திருமணம் செய்துள்ளார். அவர் செய்த கொடுமைகளை தாங்க முடியாமல், வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். வங்கியில் கொள்ளையடித்து கிடைக்கும் பணத்தில் வெளியூருக்கு, அங்கு தற்கொலை செய்து கொள்ள சிறுமி திட்டமிட்டிருந்தார் என்றனர்.
இந்த நிலையில் விசாரணை முடியும் வரை உரால்ஸ் நகரை விட்டு வெளியேற கூடாது என்ற நிபந்தனையுடன் போலீசார் அவளை விடுவித்தனர். ரஷ்யாவில் உள்ள விதிமுறையின் படி 14 முதல் 16 வயதிற்குட்பட்டோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டால், வாலிபர்களுக்கான சிறையில் அடைக்கப்படுவது வழக்கம்.
-
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications