ராகுல் பிரதமராவதைப் பார்க்க நாடே காத்திருக்கிறது: அகிலேஷ் யாதவ்
லக்னோ: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிரதமராவதைப் பார்க்க நாடே காத்திருக்கிறது என்று உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
ராகுல் காந்திக்கு கட்சி மற்றும் அரசில் முக்கிய பொறுப்பு கொடுக்கும் காங்கிரஸின் முடிவை வரவேற்கிறேன். ஆனால் அந்த பொறுப்பை சீக்கிரம் கொடுப்பது நல்லது. இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்க வேண்டும். ராகுல் காந்திக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர் முக்கிய பொறுப்புக்கு(பிரதமர்) விரைவில் வர வேண்டும். அதற்காகத் தான் நாடே காத்திருக்கிறது. ஆனால் இது குறித்த இறுதி முடிவை காங்கிரஸ் தான் எடுக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் எப்பொழுதுமே தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சிறிது காலமே உள்ளது. நாங்கள் காங்கிரஸை ஆதரித்து வருகிறோம். ஆனால் அது 2ஜி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு மற்றும் விலை உயர்வு குறித்து பதில் அளிக்க வேண்டும். எனது சட்டசபையில் உள்ள 12 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால் அந்த வழக்குகள் மாயாவதி அரசு போட்டது.
மாயாவதி அரசு ராஜா பைய்யா மீது பல பொய் வழக்குகளைப் போட்டது. அவர் மீதான பொடா வழக்கும் பொய்யானதே. எனது தந்தை அரசு நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. வெறும் 6 மாதத்தில் ஒரு அரசை மதிப்பிட முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் சிலை வைப்பதில் தான் குறியாய் இருந்தனர் என்றார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications