100 தோப்புக் கரணம் போட்ட மாணவன் காய்ச்சலில் படுத்து பலியான பரிதாபம்
ஹைதராபாத்: ஆசிரியைகள் 100 முறை தோப்புக் கரணம் போட வைத்ததால் மாணவன் ஒருவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு பலியான சம்பவம் ஹைதாராபாத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தின் மதன்னபேட் பகுதியில் உள்ள ராயல் எம்பசி உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பெயர் முகமது இஸ்மாயில் ஹுசைன். கடந்த செப்டம்பர் 3-ந் தேதியன்று பள்ளிக் கூடத்தில் மற்றொரு மாணவனுடன் இஸ்மாயில் தகராறு செய்ததாகக் கூறி ஆசிரியைகள் மொபினா பேகம் மற்றும் வாகித் ஆகியோர் 100 முறை தோப்புக் கரணம் போட வைத்திருக்கின்றனர்.
தோப்புக் கரணம் போட்டுவிட்டு வீட்டுக்குப் போன இஸ்மாயிலுக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த இஸ்மாயில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த மாணவனது பெற்றோரும் உறவினர்களும் பள்ளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையிடமும் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் இரு ஆசிரியைகள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications