பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு 25 சிறப்பு பேருந்துகள்
சென்னை: திருப்பதியில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 25 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.
திருமலை திருப்பதியில் வரும் 18ம் தேதி பிரம்மோற்சவம் துவங்குகிறது. இது வரும் 26ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த பிரம்மோற்சவத்தில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் திருப்பதிக்கு செல்லும் அனைத்து ரயில்களின் முன்பதிவுகளும் முடிந்துவிட்டது. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் 38 பஸ்களின் முன்பதிவும் 90 சதவீதம் வரை முடிவடைந்துவி்ட்டது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வரும் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை திருப்பதிக்கு கூடுதலாக 25 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அதன்படி சென்னையில் இருந்து 7 பஸ்களும், சேலத்திலிருந்து 5ம், திருச்சியிலிருந்து 4ம், கோவையிலிருந்து 3ம், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, கரூர், விழுப்புரம், வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து தலா 1 பஸ்ஸும் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றது என்பதால் இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications