ஒபாமா பாணியில் வாரந்தோறும் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றலாமே!

மெளனம் கலைத்த மன்மோகன்
டீசல் விலை உயர்வு,கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என அடுத்தடுத்த மத்திய அரசின் நடவடிக்கைகள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. கூட்டணிக் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தமது உறவையே முறித்துக் கொண்டு போய்விட்டது. நாடு ஒரு அசாதாரணமான சூழ்நிலையை எதிர்நோக்கியிருக்கும்போது பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சிகளில் உரையாற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.
இணையத்தில் லைவ்
பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையும் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பிரதமர் மன்மோகன்சிங் இப்போதாவது வாய் திறந்தாரே என்ற பாராட்டும் ஊடகங்களிடம் இருந்து வந்திருக்கிறது.
அது மட்டுமின்றி.. யூ டியூப் இணையதளத்திலும் கூட பிரதமர் மன்மோகன் சிங்கின் உரை ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. அதாவது ராஜ்யசபா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரதமர் உரையை அப்படியே யூ டியூப்புக்கு மாற்றி அசத்தியிருக்கின்றனர். யூ டியூப்பில் ஒளிபரப்புவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக டிவிட்டர் சமூக வலைதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
எந்த சமூக வலைதளங்களை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்று எந்த பிரதமர் வலியுறுத்தினாரோ அவரது உரையே இணையதளத்தில் லைவ்வாக ஒளிபரப்பியதும் ஒருவகை வினோதம்தான்!
ஒபாமா பாணி
பிரதமர் மன்மோகன் சிங் இப்போது வாயைத் திறந்து பேசியிருப்பதைப் போல் வாரந்தோறும் தொலைக்காட்சிகளில் உரையாற்றலாமே என்ற கருத்தும் பரவலாக எழுந்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில்தான் எதிர்க்கட்சிகள் பேசவிடாமல் தடுக்கின்றன என்று குற்றம்சாட்டிக் கொண்டியிருக்காமல் அமெரிக்க அதிபர் ஒபாமா வாரந்தோறும் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுவதைப் போல் மன்மோகன் சிங் மெளனத்தைக் கலைத்துப் பேசலாம் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.
அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட்தான் வானொலிகளில் உரையாற்றும் பாணியை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் ரொனால்டு ரீகனின் ஆட்சிக் காலம் முதல் ஒபாமா வரையில் அனைத்து அமெரிக்க அதிபர்களும் வாரந்தோறும் நாட்டு மக்களுக்காக உரையாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி மெளனம் கலைத்துப் பேசிவிட்டால் "செயல்படாத மெளன பிரதமர்" என்ற ஏச்சுப் பேச்சுக்கெல்லாம் இடம் இருக்காது அல்லவா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications