For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகம் திடீர் முடிவு: காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட்டது கர்நாடகம்!

By Mathi
Google Oneindia Tamil News

Cauvery
பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சனிக்கிழமை நள்ளிரவு முதல் திடீரென காவிரியிலிருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, தமிழகத்துக்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவரிடம் முதல்வர் ஷெட்டர் விளக்கினார்.

இதையடுத்து, ஆளுநரின் ஆலோசனையின்பேரில் மண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க முதல்வர் ஷெட்டர் உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியது: உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து கர்நாடக அமைச்சர்கள், சட்ட நிபுணர்கள், சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். கர்நாடகத்தில் நிலவும் வறட்சி நிலையை எடுத்துரைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாத நிலை உள்ளதை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மறு ஆய்வு செய்யுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உடனடியாக மனு தாக்கல் செய்துள்ளோம். இதை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை தற்போதைய தீர்ப்பை ஒத்திவைக்குமாறும் உண்மை நிலையைக் கண்டறிய இரு மாநிலங்களுக்கும் நிபுணர் குழுவை அனுப்பி வைக்குமாறும் அந்த மனுவில் கேட்டுள்ளோம் என்றார் அவர்.

ஆனால் ஆளுநரைச் சந்தித்தும் முடிவு மாறியது: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமரிடம் முறையிடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில், கர்நாடக ஆளுநரை முதல்வர் ஷெட்டர் சந்தித்துப் பேசிய பின்னர், காவிரியில் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.

English summary
Bowing to the Supreme Court order to release 9,000 cusecs of Cauvery water from its reservoirs daily to Tamil Nadu till October 20, the State government let the water flow from the KRS dam to the neighbouring State around midnight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X