திடீரென வெள்ளியை வாங்கி குவிக்கும் சீனா.. அதிரும் சர்வதேச மார்க்கெட்.. 10 ஆண்டுகளில் இல்லாத உச்சம்!
பெய்ஜிங்: சர்வதேச சந்தையில் திடீரென வெள்ளி பக்கம் முதலீட்டாளர்கள் தங்கள் பார்வையைத் திரும்பியுள்ளனர். உலகிலேயே அதிக அளவில் வெள்ளியைப் பயன்படுத்தும் நாடான சீனா, தனது வெள்ளி இறக்குமதியைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் சீனா இருக்கிறது. இதனால் சீனா ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தினால் அந்த மார்கெட் மொத்தமாக மாறும். இதன் காரணமாகவே சீனாவின் வெள்ளி இறக்குமதி இப்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதாவது சீனா சமீபத்திய ஆண்டுகளில் தனது வெள்ளி இறக்குமதியைப் பல மடங்கு அதிகரித்திருக்கிறதாம்.

வெள்ளி இறக்குமதி
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 836 டன் வெள்ளியை இறக்குமதி செய்து அதிரடி காட்டியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுக்கால மார்ச் மாத சராசரியான 306 டன்னை விட மிக அதிகம்! அதாவது வழக்கமான இறக்குமதி செய்வதை விடக் கிட்டத்தட்ட 2.5 மடங்கு அதிகமாகவே இறக்குமதி செய்துள்ளது.
சீனாவின் இந்தத் திடீர் பாய்ச்சலுக்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.. முதல் காரணம் சூரியசக்தி.. சோலார் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல வெள்ளி மிக அவசியம். ஏப்ரல் 1 முதல் ஏற்றுமதி வரிச் சலுகைகளில் மாற்றம் வந்த நிலையில், சீன நிறுவனங்கள் முன்கூட்டியே உற்பத்தியை அதிகரிக்க வெள்ளியை வாங்கிக் குவித்துள்ளன. அடுத்து, தங்கம் விலை எட்டாக்கனியாக உயர்ந்து வருவதால், அதற்கு மாற்றாக மக்கள் சிறிய வெள்ளிப் பார்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
தொழிற்சாலை பயன்பாடு
தற்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை சுமார் $75.76 ஆகவும், தங்கம் $4,708 ஆகவும் உள்ளது. ஈரான் போர் போன்ற புவிசார் அரசியல் சூழலால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி, பணவீக்கத்தை அதிகரித்து தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வெள்ளியின் தொழிற்சாலை பயன்பாடு சீனாவில் அதிகமாக இருப்பதால் அங்குத் தட்டுப்பாடு இருக்கிறது. இதனால் சர்வதேச விலையைக் காட்டிலும் சீனாவில் வெள்ளி ரேட் அதிகமாகவே இருக்கிறது. இதனால் ஹாங்காங் வழியாகப் பெருமளவில் வெள்ளி சீனாவிற்குள் நுழைகிறது.
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "சூரியசக்தி மற்றும் எலக்ட்ரிக் வாகன துறைகளில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது உண்மைதான். ஆனால், விலையேற்றத்திற்கு தொழிற்துறை தேவையை விட ஊகங்களும் மற்றும் சில்லறை முதலீடுகளும் தான் காரணமாக இருக்கிறது. இதனால் குறுகிய காலத்தில் வெள்ளி விலை கடுமையாக ஏறி இறங்கும். தங்கத்தை விட வெள்ளியில் ரிஸ்க் அதிகம்!
அதிகரிக்கும் இறக்குமதி
அதேநேரம் சீனாவில் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. அதை நாம் புறக்கணிக்க முடியாது. நீண்ட கால அடிப்படையில் வெள்ளி ஒரு நல்ல முதலீடுதான். ஆனால், டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் சர்வதேசப் பதற்றங்களால் விலை அடிக்கடி மாறும். எனவே, விலை குறையும் போது கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ப்பது நல்லது.. விலை உச்சத்தில் இருக்கும்போது அவசரப்பட்டு வாங்க வேண்டாம்" என்கிறார்கள்.
கவனம் தேவை
தொழிற்துறைத் தேவை ஒருபுறம் இருந்தாலும், வெள்ளி விலை என்பது இப்போது ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருக்கிறது. சீனா தனது சூரியசக்தி உற்பத்தி அளவைக் குறைக்கத் திட்டமிட்டு வருவதும், வெள்ளிக்கு மாற்றாக மலிவான உலோகங்களைப் பயன்படுத்த நிறுவனங்கள் யோசிப்பதும் கவனித்த வேண்டிய விஷயங்கள். அதேநேரம் தங்கம் என்பது மானிட்டரி மெடல். அதாவது உலக நாடுகளின் வங்கிகள் தங்கத்தை வாங்கி சேமிக்கும். ஆனால், வெள்ளியை அதுபோல எந்தவொரு நாடும் சேமிப்பதில்லை. தொழிற்துறையைத் தேவையைப் பொறுத்தே வெள்ளி விலை இருக்கும். ஒருவேளை சீனா தனது இறக்குமதியைக் குறைத்தால் அது வெள்ளி விலையில் மோசமாக எதிரொலிக்கும்.
உங்களுக்கு லக் இருந்தால் தங்கத்தை விட வெள்ளி அதிக லாபம் தரக்கூடும்.. ஆனால், அதே சமயம் சட்டெனச் சரிந்து நஷ்டத்தையும் தரக்கூடும். எனவே, உங்கள் முதலீட்டில் வெள்ளிக்கு அதிக பங்கு தரவே கூடாது.. சிறு பகுதியை மட்டும் வெள்ளியில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications