சோனியாவுக்காக மத்திய அரசு செலவு செய்தது ரூ3 லட்சம் மட்டும்தான்: பிரதமர் அலுவலகம் விளக்கம்
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணத்துக்காக மத்திய அரசு ரூ3 லட்சத்தை மட்டுமே செலவு செய்திருக்கிறது என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்திருக்கிறது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுப்பயணங்களுக்காக அரசு கருவூலத்தில் இருந்து பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சோனியா காந்தியின் சிகிச்சைக்காக ரூ1,880 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று வெளியான தகவல்களில் உண்மை எதுவும் இல்லை. ஊடகத் தகவல்களை ஏற்கனவே தலைமை தகவல் ஆணையர் மறுத்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில், பெல்ஜியம் அரசு ஒரு தேசிய விருதினை அறிவித்து, அதை பெற்றுச்செல்வதற்காக விடுத்த அழைப்பின்பேரில், சோனியா சென்று வந்த செலவுகளை மட்டுமே இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் ஏற்றது. அதுவும் செலவு ரூ.3 லட்சத்துக்குள்தான். மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரின் இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவ சிகிச்சைகளுக்காக அரசு எந்த செலவும் செய்தது இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications