சொத்து குவிப்பு: கே.என்.நேருவுக்கு 4,000 பக்க குற்றப்பத்திரிகை நகல்
திருச்சி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஆஜரான முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்கு 4 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
திமுக ஆட்சிக்காலத்தில் கே.என்.நேரு அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 10.8.2011-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் 60 லட்சத்து 4 ஆயிரத்து 349 ரூபாய் 8 பைசா பணமும், 75 பவுன் தங்க நகை மற்றும் 1 கிலோ வெள்ளி நகைகள் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு திருச்சி ஊழல்தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் நடந்து வருகிறது. இதில் தனக்கு குற்றப்பத்திரிகை நகலை வழங்கவேண்டும் என்று கே.என்.நேரு கேட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
கே.என்.நேரு, அவரது மனைவி சாந்தா ஆகியோர் ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது கே.என்.நேருவிடம் 4 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர் மீண்டும் இந்த வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications