For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில்லறை வர்த்தகம்... ஏற்றிக் கட்டிய வேட்டியுடன் டி.ராஜேந்தர் வீராவேச போராட்டம்!

Google Oneindia Tamil News

T Rajendar
சென்னை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதை எதிர்த்தும், காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் போக்கைக் கண்டித்தும் லட்சிய திமுக சார்பில் சென்னையில் இன்று கட்சித் தலைவர் டி.ராஜேந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேட்டியை ஏற்றிக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் வீராவேசமாகப் பேசினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரேநடந்த போராட்டத்தின்போது ராஜேந்தர் பேசுகையில், அன்று வெள்ளைக்காரனைத் துரத்தி சுதந்திரம் வாங்கி தந்த காங்கிரஸ் வேறு. இன்று சோனியா தலைமையில் உள்ள காங்கிரஸ் வேறு.

நீங்க அளித்தீங்க அனுமதி அந்நிய முதலீடு. தொழிலாளர்கள் ஏந்த வேண்டும் திருவோடு. கடைசியில் அவர்கள் ஓட வேண்டும் தெருவோடு.

கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தையே மதிக்கவில்லை என்றால் எந்த நீதிமன்றத்தை மதிக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பையே எதிர்த்து காவிரி தண்ணீருக்கு கர்நாடகா போடுகிறது தடை. இதற்கு தமிழக அரசு எங்கே காணும் விடை.

ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகிறார் தண்ணீர் தரக்கூடாது என்று இது நியாயமா.கர்நாடகத்திற்கு தமிழத்திலிருந்து மின்சாரம் மட்டும் வேண்டும். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் தரமாட்டாங்களாம்.

மின்சார தட்டுப்பாடு ஏன் வருகிறது. வீட்டுக்கு வீடு டிவி, மிக்ஸி, கிரைண்டர். பிறகு எப்படி மின்சார பற்றாக்குறை இல்லாமல் இருக்கும். சம்சாரம் இல்லாமல் கூட வாழ்ந்திடலாம். ஆனால், மின்சாரம் இல்லாமல் வாழமாட்டான். இதுதான் இன்றைய நிலை.

ஆகவே மத்திய அரசு காவிரி பிரச்சனையிலும், மின்வெட்டு பிரச்சனையிலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் என்றார் ராஜேந்தர்.

English summary
LDMK leader T Rajendhar and his cadres staged a protest against FDI and Karnataka govt in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X