கோவாவில் கடற்படை படை ஹெலிகாப்டர் விழுந்து மூவர் பலி
Subscribe to Oneindia Tamil
பனாஜி: கோவாவில் கடற்படை படைக்கு சொந்தமான சேடக் ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட மூவர் இருந்துள்ளனர். மும்பையிலிருந்து பெங்களூருக்கு பயிற்சிக்காக சென்ற இந்த ஹெலிகாப்டர் கோவா தபோலின் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.
பின்னர் அங்கிருந்து கிளம்பியுடன் அது தரையில் விழுந்து நொறுங்கியது. தரையில் விழுந்து அந்த ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது.
இதில் ஹெலிகாப்டரில் இருந்த மூவருமே உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கோவா விமான நிலையத்தில் பயணிகள் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications