அண்ணன் ஜெகனுக்காக பாதயாத்திரை போகிறார் தங்கை ஷர்மிளா ரெட்டி!

Subscribe to Oneindia Tamil

Sharmila
ஹைதராபாத்: தனது சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் அடைபட்டுள்ளதால் அவருக்குப் பதில் அவர் தொடங்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வழி நடத்தி வரும் சகோதரி ஷர்மிளா ரெட்டி இப்போது மக்கள் கூட்டத்தை தன் பக்கம் திருப்பி வருகிறார். இடைத் தேர்தலை வெற்றிகரமாக சந்தித்த அவர் அடுத்து பாத யாத்திரை செல்லவுள்ளார்.

மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சிக்குள் புறக்கணிக்கப்பட்டு வந்ததால், தனியாகப் பிரிந்து தனிக் கட்சி தொடங்கினார். இந்த புதுக் கட்சியானது, சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியை நாறடித்து விட்டது.

அந்த இடைத் தேர்தலுக்கு முன்பாகவே சிபிஐயை வைத்து ஜெகன் மோகன் ரெட்டியை உள்ளே தூக்கிப் போட்டு விட்டது காங்கிரஸ் அரசு. இதனால் தொடர்ந்து சிறையில் அடைபட்டுள்ளார் ஜெகன் மோகன். இருந்தாலும் அவரது சகோதரி ஷர்மிளா களத்தில் இறங்கி கட்சியை கலகலப்பாக கொண்டு சென்று வருகிறார்.

ஜூனில் நடந்த இடைத் தேர்தல் பிரசாரத்தில் கூட அவர்தான் தலைமை தாங்கி காங்கிரஸை கிழி கிழியென்று கிழித்தார். அவருக்கும் ஏக கூட்டம் கூடியது.

இந்த நிலையில் தற்போது 3000 கிலோமீட்டர் தூரத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளவுள்ளார் ஷர்மிளா. தனது தந்தையின் நினைவிடத்திலிருந்து இன்று யாத்திரை தொடங்கும் ஷர்மிளா தொடர்ந்து 3000 கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்து மக்களைச் சந்தித்து தனது கட்சிக்கு ஆதரவு திரட்டுகிறார்.

மொத்தம் 23 மாவட்டங்களுக்கு தனது மகள் செல்லவுள்ளதாக ஷர்மிளாவின் தாயார் விஜயலட்சுமியம்மா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+