நகை விளம்பரத்துக்காக பிகினி உடையில் பிரளயம் கிளப்பிய பிரிட்டிஷ் நடிகை!

அமி சைல்ட்ஸ் நடிகை மட்டுமல்ல, பிசினஸ் பெண்மணியும் கூட. தங்க நகைகள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து விற்று வருகிறார். தான் லேட்டஸ்டாக உருவாக்கியுள்ள நகைகளை விளம்பரப்படுத்த அவர் பிகினி உடையைத் தேர்வு செய்து கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து கிளுகிளுக்க வைத்துள்ளார்.
லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் 22 வயதான சைல்ட்ஸ், தங்க நிற பிகினியில் தனது மார்பகக் கவர்ச்சி உள்ளிட்ட இத்யாதி இத்யாதிகளை வெளிக்காட்டியபடி நகைகளை அணிந்து போஸ் கொடுத்தார். பாத்டப்பில் படுத்தபடி காட்சியளித்த அவரைப் பார்த்த பலரும் அதிசயித்துப் போயினர்.
தான் வடிவமைத்த புதிய வகை வளையல், மோதிரம் மற்றும் நெக்லஸ் ஆகியவற்றை அணிந்து போஸ் கொடுத்தார் சைல்ட்ஸ்.
சமீபத்தில் தான் தயாரித்த பெர்ப்யூம் மற்றும் விளையாட்டுப் பொருட்களையும் இதேபோல கவர்ச்சிகரமாக அறிமுகப்படுத்தினார் சைல்ட்ஸ் என்பது நினைவிருக்கலாம். இந்த நகை உள்ளிட்ட பொருட்களை சைல்ட்ஸின் இணையதளத்தின் மூலம்தான் நாம் வாங்க முடியுமாம்...












Click it and Unblock the Notifications