குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்... செய்த தவறை எண்ணி கண்ணீர் சிந்தும் மனோகரன்!
கோவை: கேட்ட நெஞ்சங்கள் பதறிப் போயின... பார்த்தவர்கள் அழுது புலம்பினர்.. அப்படி ஒரு அதிர்ச்சிச் சம்பவம் கோவை சிறுமி முஷ்கின் மற்றும் அவரது தம்பி ஆகியோரின் பரிதாப முடிவு. இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மனோகரன் தற்போது கோவை சிறையில் கண்ணீரும் கம்பலையுமாக சோகத்தில் உள்ளானாம்.

கோரமாக சீரழித்து.. கொடூரமாகக் கொலை
இருவரையும் கடத்திச் சென்று சிறுமி முஸ்கினை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து, பின்னர் இருவரையும் கால்வாயில் தள்ளி விட்டு கொடூரமாகக் கொலை செய்தனர் கால் டாக்சி டிரைவர் மோகன்ராஜும், அவனது சகா மனோகரனும்.

என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட மோகன்ராஜ்
இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களில் மோகன்ராஜ் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றபோது போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். மனோகரன் மட்டும் விசாரணைக்குட்படுத்தப்பட்டான்.

2 தூக்கு ... 3 ஆயுள்
ஒவ்வொரு குற்றத்துக்காகவும் மனோகரனுக்கு 2 தூக்குத் தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும், 3 ஆண்டு மற்றும் 3 மாத சிறைத் தண்டனையும் விதித்து கோவை மகளிர் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

குமுறி வந்த அழுகை
தீர்ப்பைக் கேட்டதும் மனோகரன் அழுது விட்டான். மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது வழியில் கொடுத்த உணவை சாப்பிட மறுத்து விட்டு அழுதபடியே இருந்தான்.

கவலைப்படாதே... சிறையில் கவுன்சிலிங்
இதையடுத்து சிறையில் அவனுக்கு கண்காணிப்பாளர் முன்னிலையில் கவுன்சிலிங் தரப்பட்டதாம். இந்த தண்டனை முடிவு அல்ல. உங்கள் வக்கீல் மூலமாக அப்பீல் செய்யலாம். மனம் தளர வேண்டாம் என்று அவனுக்கு ஆலோசனை தரப்பட்டது.

இரவு முழுவதும் தவிப்பு
சிறையில் அவனுக்கு வெள்ளைச் சீருடையும், கைதி எண்ணும் வழங்கப்பட்டது. தண்டனை கைதிகள் அடைக்கப்படும் சிறை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டான். அவனுடன் மேலும் 2 கைதிகள் அறையில் உள்ளனர். அதில் ஒருவர் செல்வம், சென்னையைச் சேர்ந்தவர், தூக்குத் தண்டனைக் கைதி. இரவு முழுவதும் சரியாக தூங்காமல் தவித்தபடி இருந்தானாம் மனோகரன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications