ஆப்கானிஸ்தானிலி்ருந்து படைகளை வாபஸ் பெற ஒபாமாவுக்கு தலிபான் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
காபூல்: அமெரிக்கா அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமாவுக்கு தலிபான் தீவிரவாதிகள் இணையத்தளம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் மூலம் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில்,
மீண்டும் அதிபாராகி இருக்கும் ஒபாமாவுக்கு ஒன்றை நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். ஆப்கானிஸ்தான் மண்ணில் உங்கள் படைகள் தோல்வி அடைந்து உள்ளன. அதை நீங்கள் உடனே ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே அமெரிக்க படைகளை உடனடியாக இங்கிருந்து வாபஸ் பெற வேண்டும்.
ஆப்கானிஸ்தானில் என்ன நிலைமை நிலவுகிறது என்பதை ஒபாமா புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பொய் சொல்லி உலகத்தை ஏமாற்ற நினைக்கக் கூடாது.
எங்கள் புனித பூமியில் இனிமேலும் உங்கள் படைகள் இருக்கக் கூடாது. இனியாவது உலக போலீஸ்காரர் போல அமெரிக்கா செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications