சிரியா நாட்டு போராளிகளுக்கு பிரான்ஸ் அங்கீகாரம்: ஆயுதங்கள் தரவும் திட்டம்!

இதன்மூலம் சிரிய அரசுக்கு எதிராக அரசியல், தூதரகரீதியில் கடுமையான முடிவை பிரான்ஸ் எடுத்துள்ளது. பிரான்ஸைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளும் இந்த முடிவை எடுத்தால் ஆசாதுக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.
கடந்த 22 மாதங்களாக சிரியாவில் பெரும் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. பல்வேறு அமைப்புகளாகப் பிரிந்து கிடக்கும் சிரிய போராளிகள் அரசுக்கு எதிராக குண்டுவெடிப்புகளை நடத்தி வருவதோடு, ராணுவத்தினரையும் தாக்கி வருகின்றனர். இதையடுத்து ராணுவத்தினரைக் கொண்டு போராளிகளை கொன்று குவித்து வருகிறார் ஆசாத்.
இந் நிலையில் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கோரி வருகின்றன. இந்த நாடுகளின் ஆதரவோடு சிரியா மீது துருக்கி, இஸ்ரேல் ஆகியவை கூட அவ்வப்போது சிரியா மீது ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஆனால், பதவி விலக மறுத்து வருகிறார் ஆசாத். இந் நிலையில் போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் கத்தாரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது Syrian National Council என்ற பெயரில் அனைவரும் இணைந்து செயல்படுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இந் நிலையில், இவர்களுக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலாண்டே கூறுகையில், Syrian National Council அமைப்பை பிரான்ஸ் அங்கீகரிக்கிறது. ஆசாதை எதிர்த்துப் போராடும் அமைப்புகள் இணைந்து ஒரு (போட்டி) அரசை அமைத்தால் அவர்களுக்கு ஆயுத உதவிகள் தரப்படும். அங்கு ஜனநாயகத்தைக் கொண்டு வரவே இந்த நடவடிக்கையை எடுக்கிறோம் என்றார்.
சிரியாவில் ஆசாதுக்கு ஷியா முஸ்லீம்களின் ஆதரவு உள்ளது. அவரை சன்னி பிரிவு முஸ்லீம்கள் எதிர்த்து வருகின்றன.
அதே போல ஈரான், லெபனான் போன்ற ஷியாக்கள் அதிகம் உள்ள நாடுகள் ஆசாதை ஆதரிக்கின்றன. ஆனால், செளதி, கத்தார் உள்ளிட்ட சன்னி பிரிவு நாடுகள் அவரை எதிர்த்து வருகின்றன. இந்த நாடுகள் தான் ஆசாத் எதிர்ப்புப் படையினருக்கு ஆயுத உதவிகளும் நிதி உதவியும் தந்து வருகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் மறைமுக ஆதரவு உள்ளது.
அதே நேரத்தில் ரஷ்யாவும் சீனாவும் ஆசாதுக்கு ஆதரவு தந்து வருகின்றன.
ஆசாத் குடும்பத்தினர் சிரியாவை 42 ஆண்டுகளாக ஆண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications