2012ல் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி விபத்தில் சிக்கி 547 பேர் பலி
சென்னை: கடந்த அக்டோபர் மாதம் வரை சென்னையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் 547 பேர் விபத்தில் .சிக்கி உயிர் இழந்துள்ளனர் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து போலீசார் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னையில் 40 லட்சம் வாகனங்கள் ரோட்டில் ஓடுகின்றன. இவற்றில் 78 சதவீதம் அதாவது 29 லட்சத்து, 44 ஆயிரத்து 750 வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் ஆகும். கடந்த 2011ம் ஆண்டு இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் 683 பேர் விபத்தில் இறந்தனர். இவர்களில் ஹெல்மட் அணியாததால் 667 பேர் மாண்டுள்ளனர்.
இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் வரை இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் 654 பேர் விபத்தில் பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டி 547 பேர் இறந்திருக்கிறார்கள். இதுபோன்ற உயிர் இழப்புகளை தடுக்க, ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க வாகன ஓட்டுனர்களிடம் தற்போது விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது.
ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும். 2 சக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். குடித்துவிட்டு, அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இனி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் போக்குவரத்து பிரச்சனைகளை தீர்க்க பொதுமக்களின் பல்வேறு அங்கத்தினர், ஆட்டோ டிரைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாகராட்சி, தொலைபேசி, மின்வாரியம் மற்றும் பேருந்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்தினர் ஆகியோருடன் போக்குவரத்து போலீசார் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications