96 வயதில் அப்பாவான தாத்தா: பீட்டா அமைப்பின் போஸ்டர் மாடலாகிறார்
சோனிபட்: 96 வயதில் இரண்டாவது முறையாக அப்பாவான ஹரியானா விவசாயின் புகைப்படம் பீட்டா அமைப்பின் விளம்பர போஸ்டரில் வரவிருக்கிறது.
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கர்கோடா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்ஜித் ராகவ். 94 வயதில் 58 வயதான மனைவிக்கு குழந்தைபாக்கியம் கொடுத்தவர். இந்நிலையில் அவரது மனைவி கடந்த மாதம் 2வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதாவது 96 வயதில் ராகவ் இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளார்.
தள்ளாத வயது தாத்தா என்று அவரைக் கூற முடியாது. இந்த வயதிலும் மனிதர் கம்பீரமாக திடகாத்திரமாக உள்ளார். தனது மகன்களுக்கு நல்ல வாழ்க்கையை அளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் இனியும் குழந்தை வேண்டாம் என்று தனது 60 வயது மனைவியை குடும்பக் கட்டுப்பாடு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
பாதாம், வெண்ணெய், பால் மற்றும் சைவ உணவுகள் சாப்பிடுவது தான் தனது ஆண்மைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இறைச்சி உண்பதையும், விலங்குகளின் தோலால் செய்த பொருட்களை பயன்படுத்துவதை எதிர்த்தும் பிரச்சாரம் செய்து வரும் பீட்டா அமைப்பு தங்கள் விளம்பர போஸ்டர்களில் ராகவ் படத்தை போட்டு சைவ உணவு உண்பவர்களுக்கு 96 வயது வரை ஆண்மை இருக்கும் என்று பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளது.
முன்னதாக இது போன்ற விளம்பர போஸ்டர்களில் ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பமீலா ஆன்டர்சன், ஆங்கில கவிஞரும் பிரபலமான இசையமைப்பாளருமான சர். பால் மெக்கார்ட்னி போன்றோரின் புகைப்படங்கள் வந்துள்ளன. இந்நிலையில் வரும் 2013ம் ஆண்டிற்கான பீட்டாவின் விளம்பர போஸ்டரில் முதன்முதலாக இந்தியாவைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரின் புகைப்படம் வரவிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications