திருப்பதி அருகே செம்மரக் கடத்தல் கும்பல் மீது போலீஸ் துப்பாகிச்சூடு- ஒருவன் பலி- 20 பேர் படுகாயம்
திருப்பதி: திருப்பதி அருகே செம்மரக் கடத்தல் கும்பல் ஒன்றின் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவன் பலியானான். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
தமிழக- ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளில் அதிகளவு செம்மரங்கள் இருக்கின்றன. இவற்றை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தும் தொழில் சென்னை புறநகரில் பிரபலம். ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்படும். இப்படி சென்னைக்கு கொண்டுவரப்படுகிற செம்மரக் கட்டைகள் பல டன்கள் பிடிபட்டிருக்கின்றன.
இந்நிலையில் இன்றும் திருப்பதி அருகே செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தும் கும்பலின் நடமாட்டம் இருக்கும் தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடத்தல் கும்பலைப் பிடிக்க போலீசார் சென்றபோது அவர்கள் தப்ப முயன்றனர். இதையடுத்து போலீசார் அக்கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கடத்தல் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிலர் பிடிபட்டனர். பிடிபட்ட இவர்கள், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications