என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபு, பாரதி மீது 13 வழக்குகள்
Subscribe to Oneindia Tamil
மானாமதுரை: என்கவுன்ட்டரில் பலியான பிரபு, பாரதி ஆகியோர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருப்பாச்சேத்தியை அடுத்த புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாரதி, பிரபு. இதில் பிரபுக்கு திருமணமாகி ஒரு மகனும் உள்ளனர். 10-ம் வகுப்பு படித்த பிரபு மீது சிப்காட் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி, கொலை ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டதாக பிரபு மீது வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
பிரபுவின் கூட்டாளி பாரதி. இன்னும் திருமணமாகவில்லை. பாரதி மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இருவருமே அப்பகுதியில் ரவுடிகளாக வலம் வந்தவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications