தமிழ் ஈழம் கண்டிப்பாக மலரும்.. மலேசிய தமிழ் எழுத்தாளர்களிடம் வைகோ உறுதி

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 33 பேர் அடங்கிய குழுவினர் கடந்த நவம்பர் 25ம் தேதி இந்தியா வந்தனர்.
புதுச்சேரித் தமிழச் சங்கம் சார்பில் நவம்பர் 25ம் தேதி மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற எழுத்தாளர்கள் இன்றைய தினம் சென்னையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்துப் பேசினர்.
அவர்களுக்கு வரவேற்பு அளித்துப் பேசிய வைகோ மலேசிய தமிழர்களின் எழுத்துக்களை புகழ்ந்துரைத்தார். அப்போது வைகோ கூறுகையில், தமிழ் ஈழம் கண்டிப்பாக ஒரு நாள் மலரும். மலேசியாவில் 525 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. அத்தனையும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதற்கு உங்களைப் போன்ற எழுத்தாளர்கள்தான் காரணம். இதற்காக உங்களைப் பாராட்டுகிறேன் என்று கூறினார் வைகோ.
பின்னர் அனைவருக்கும் மதிய உணவு விருந்தளித்துக் கெளரவப்படுத்தினார் வைகோ. தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் டிசம்பர் 4ம் தேதி தங்களின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மலேசியா திரும்ப உள்ளனர்.












Click it and Unblock the Notifications