இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்: அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை மாநில அரசிடம் தெரிவித்துள்ளனர்.

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகள் விவரம் வருமாறு:

1) தமிழகத்தில் அதிமுக அரசு பதவி ஏற்றதும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சுழல் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அத்திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

2) மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

3) மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சதவிகிதம் வேலை வாய்ப்பில் சரிவர ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

4) தனியார் துறையில் ஐந்து சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

5) அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் சீராக கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.

6) சுயதொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனே கடன் உதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும்.

7) மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக நிதி மையங்கள் அமைக்க வேண்டும்.

8) மாதம் தோறும் ரூபாய் மூன்று ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.

9) தமிழகத்தில் 3,365 மாற்றுத் திறனாளிகளுக்கு இன்னும் திருமண உதவித் தொகை கிடைக்கவில்லை.

10) தமிழகத்தில் 16.40 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில் 50 சதவிகிதம் பேர்களுக்கு இன்னும் அடையாள அட்டை வழங்கவில்லை.

11) மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்ட உரிமம் வழங்க வேண்டும்.

12) மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

13) மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து பஸ்களிலும் ஒரே மாதிரியான பாஸ் வழங்க வேண்டும்.

14) மாற்றுத் திறனாளிகளை மாதம் தோறும் அமைச்சர்கள், அதிகாரிகள் சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்.

15) தற்காலிகமாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை அங்கேயே நிரந்தரம் செய்ய வேண்டும்.

16) மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த ஆட்சியில் வழங்கிய மருத்துவக் காப்பீடு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்.

17) தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு விடுதி அமைக்க வேண்டும்.

18) தேர்தல் பணிகளுக்கு மாற்றுத் திறனாளிகளை அனுப்பக் கூடாது.

19) மாற்றுத் திறனாளி அரசு உழியர்களுக்கு பத்து ஆண்டு பணி முடித்த நிலையில் குடும்ப ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+