'மோடி ஒரு பொய் விளம்பரம் செய்யும் வியாபாரி': குஜாராத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் தாக்கு

குஜராத் மாநில சட்டசபைக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் முடிவடைந்திருக்கிறது. இன்று 3 இடங்களில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஜாம்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகையில், குஜாரத் முன்னேறியிருப்பதாக ஒரு வியாபாரியைப் போல் பொய்யாக விளம்பரம் செய்கிறார் மோடி. இந்த ஜாம்நகரில் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தண்ணீர் கிடைக்கிறது? 3 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் 25 நிமிடம்தான் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் மோடி சொல்கிறார் குஜராத் ஒளிர்கிறது என்று.
இந்த மாநிலத்தில் சுமார் 10 லட்சம் பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். ஆனால் மாநிலம் பிரகாசிக்கிறது என்கிறார் வியாபாரி மோடி. குஜராத் மாநிலத்தின் சட்டசபைக் கூட்டம் ஒரு ஆண்டுக்கு மொத்தமே 25 நாட்கள்தான் கூடுகிறது. இப்படிக் கூட்டினால் மக்களின் பிரச்சனைகள் எப்படி அரசுக்கு தெரியவரும்?. அந்த 25 நாட்கள் கூட்டத்திலும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிடுகிறார் மோடி குஜராத் மாநிலத்தில் மட்டும் சுமார் 14,000 ஆர்.டி.ஐ. மனுக்களுக்குப் பதில் தராமல் இருக்கிறது மோடி அரசு.
காந்தியின் கொள்கைகள் என்பது குஜராத் மக்களின் கொள்கைகள். நான் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுகிறவன். குஜராத் அரசும், மோடியும் தங்களது கனவை நனவாக்கிக் கொள்ளவே முயற்சிக்கின்றனர். மக்களின் கனவை நனவாக்க பாடுபடவில்லை. ஒரு நல்ல தலைவர் என்பவர் மக்களது கனவை நனவாக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications