கேரளாவில் எலிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி: மக்கள் பீதி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் வேகமாக பரவின. இதனால் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதன் காரணமாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் திருவனந்தபுரம் சாமவிளையைச் சேர்ந்த சரோஜினி, கொல்லம் அஞ்சலுமூடு பகுதியைச் சேர்ந்த அனில்குமார் மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் நிலைமை மோசமானதைத் தொடர்ந்து கடந்த வாரம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தனர். எலிக் காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியான சம்பவம் கேரளாவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications