திருடியதாக கூறி சிறுமிகளை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மக்கள்: மனித உரிமைகள் தினத்தில் பரபரப்பு
சேலம்: சேலத்தில் துணிகளை திருட வந்ததாக கூறி 3 சிறுமிகளை பொதுமக்களே கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் தேதி இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கல்லாங்குத்து பகுதியில் உள்ள ஒரு தையலகத்தில் துணிகள் திருடு போயின. இந்த நேரத்தில் பழைய துணிகளை வாங்க 4 சிறுமிகள் வந்ததாகவும், அவர்கள் திருட வந்திருப்பதாக கூறி பொதுமக்களே சேர்ந்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். ஆனால், தாங்கள் திருடவில்லை என கூறியும் பொதுமக்கள் அடித்ததாக சிறுமிகள் கதறினர். அவர்களில் ஒருவர் தப்பி ஓடி உள்ளார்.
தகவல் அறிந்து சேலம் நகர காவல்துறையினர், சிறுமிகளை மீட்டு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். டிசம்பர் 10ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சேலத்தில் மனித உரிமைகளை மீறும் வகையில் இவ்வாறு சிறுமிகள் தாக்கப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது. இந்த சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.குற்றம் நிரூபிக்கப்படாமலேயே அந்த சிறுமிகளை அடித்து உதைத்தது சட்டப்படி குற்றம் என்று கூறிய அவர்கள், இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கவனித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாசில்தாரை விசாரணை நடத்துவதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசணம் உத்தரவிட்டார். இதனையடுத்து சிறுமிகள் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications