காபி பிரியரா நீங்கள்? யானைக் கழிவின் ஸ்பெசல் காபி சாப்பிட்டிருக்கீங்களா?
சியாங் ராய்: தாய்லாந்து நாட்டில் யானைக் கழிவில் இருந்து கிடைக்கும் காபிக் கொட்டையைக் கொண்டு ஸ்பெசல் காபி தயாரித்து தருகின்றனர். இது மூலிகை காபியாக இங்கு பருகத் தரப்படுகிறது. ஒரு கப் காபி மூவாயிரம் ரூபாய்தான் என்கின்றனர் இந்த காபி விற்பனையாளர்கள். இந்த காபி சாப்பிட்டால் யானை பலம் வருமாம். இதற்காகவே ஆர்டர் கொடுத்து சாப்பிடுகின்றனர் இந்த காபி பிரியர்கள். எப்படி இந்த காபி கிடைக்கிறது தெரிந்து கொள்ளுங்களேன்.

யானைக் கழிவு ஆரோக்கியம்
சிறுவயதில் ஊரில் யானை வந்தால் அதன் பின்னாலேயே சென்று அது போடும் சாணத்தை மிதிப்பார்கள். இதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
யானைக்கழிவு காபி குடிக்கலாமே
இப்போது யானையின் கழிவில் இருந்து காபியே தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிளாக் ஐவரி காபி என்ற பெயர் கொண்ட இந்த காபியை தாய்லாந்தில் தயாரிக்கின்றனர்.விலை ஒரு கப் ஜஸ்ட் 3000 ரூபாய்தான்.
ஸ்பெசல் கவனிப்பில் யானைகள்
தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் இந்நாட்டுடன் லாவோஸ், மியான்மர் நாட்டு எல்லைகள் சந்திக்கும் இடம் கோல்டன் டிரையாங்கிள். மலைப்பாங்கான பகுதி மூலிகைளுக்கு பிரசித்தி பெற்ற இடம். இங்கு இத்தகைய காபி தயாரிப்பதற்காகவே ஸ்பெஷல் கவனிப்புடன் யானைகள் வளர்க்கப்ப டுகின்றன.
காபி கொட்டைகள் தீவனம்
யானைகளுக்கு புல், வாழைப்பழம், கரும்பு ஆகியவற்றுடன் காபி கொட்டைகளையும் தீவனமாக உண்ணக் கொடுக்கின்றனர்.அந்த காபி கொட்டைகள் யானையின் வயிற்றில் 15 முதல் 30 மணி நேரம் வரை ஜீரணமாகிறது. அப்போது உணவு நொதித்தல் காரணமாக அந்த கொட்டைகளில் சுவை கூடுகிறது.
சாணத்தில் இருந்து பிரிக்கப்படும் கொட்டைகள்
இதன்பின்னர் யானை வெளியேற்றும் சாணியில் செரிக்காமல் வெளியேறியிருக்கும் காபி கொட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. 33 கிலோ கொட்டைகளை யானை உண்டால் ஒரு கிலோ காபி கொட்டை மட்டுமே கிடைக்கும். இதன் விலை ஒரு கிலோ 60,000 ரூபாயாம்.
விலை அதிகம்தான் ஆனால் ஆரோக்கியம்
குறைவான அளவு காபி கொட்டைகள் கிடைப்பதால்தான் அதன் விலை மிக அதிகமாகிறது. இந்த கொட்டைகளை வறுத்து, அரைத்து தயாராவதுதான் பிளாக் ஐவரி காபி. இதை அருந்துவதால் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றும் ‘யானை பலம்' கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்!
ஒரு கப் ஜஸ்ட் 3ஆயிரம் ரூபாய்தான்
இந்த பிளாக் ஐவரி காபி வடக்கு தாய்லாந்து, மாலத்தீவு மற்றும் அபுதாபியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இந்த காபி கிடைக்கிறது. ஒரு கப் 3000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications