வரலாற்று சிறப்புமிக்க 13 கண் பாலம் புனரமைக்கும் பணி நிறுத்தம்
புனலூர்: வரலாற்று சிறப்பு வாய்ந்த 13 கண் பாலத்தை புனரமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதையாகும். 1873ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை பணிகள் 27 ஆண்டுகள் நடைபெற்றது. இப்பாதையை அமைத்திட தென்னிந்திய ரயில்வே கம்பெனி ரூ.17 லட்சமும், திருவாங்கூர் நிர்வாகம் ரூ.7 லட்சமும், அப்போதைய திருவாங்கூர் திவான் ராமய்யர் ரூ.6 லட்சமும் ஆக மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901ம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1902ம் ஆண்டு முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1904ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்கிட முதல் பயணிகள் ரயில் கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு தனது பயணத்தை நிலக்கரி புகையை கக்கித் தொடங்கியது. அன்று பயணத்தை தொடங்கிய ரயிலின் பெயர் தூம சகடசூரன் ஆகும். சில மாதங்கள் இயங்கிய ரயில் தென்மலை-கழுதுருட்டி இடையே உள்ள ஒரு மலை குகையில் மண் சரிவு ஏற்பட்டு அப்படியே பல பயணிகளோடு மண்ணோடு மண்ணாகி புதைந்து போனது.

மலைக் குகைகள்:
அதன்பின் அருகிலேயே 13 கண் கொண்ட மிகவும் பிரமாண்டமான ஒரு பாலத்தை கட்டினர். அப்பாலம் வழியே ரயி்ல் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இப்பாதையில் பகவதிபுரம் முதல் ஆரியங்காவு இடையே 1 கிமீ தொலைவில் ஒரு மலைக்குகையும், கழுதுருட்டி-தென்மலை-இடமண் இடையே 4 மலைக் குகைகளும், 5 பெரிய பாலங்களும், 120க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும் உள்ளன.

ஆயிரம் பேரை காவு வாங்கிய...
எஸ் வளைவு என்ற பகுதி இரு மாநில எல்லை பகுதியாகும். இங்கு கீழே பேருந்தும், மேலே ரயிலும் செல்ல தொடங்கும். இதிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சென்றல் அடர்ந்த பாறைகளை உடைத்து உருவாக்கப்பட்ட ரயில் பாதை தொடங்குகிறது. இதற்கு அடுத்தாற்போல் ஆயிரம் பேரை காவு வாங்கியதாக இன்றும் செவிவழி கதையாக கூறப்படும் ஆரியங்காவு பகுதியில் 500 அடி உயரம் கொண்ட மலையில் சுமார் 15 அடி உயரமும், 15 அடி அகலமும், கொண்ட 900 மீ்ட்டர் நீளம் கொண்ட முதல் மலைக்குகை தொடங்குகிறது.

தந்திரமாக வேலை வாங்கிய ஆங்கிலேயர்கள்
தென்மலை 13 கண் பாலம் 102.72 மீட்டர் நீளமும், 5.18 மீட்டர் அகலமும் கொண்டது. ஆரியங்காவு குகை கடல் மட்டத்தில் இருந்து 280 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ரயில் பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட பின் வனப்பகுதியை சுத்தம் செய்ய ஆட்கள் இன்றி தவித்த ஆங்கிலேயர்கள் அப்பகுதிகளில் வெள்ளி காசுகளை அள்ளி வீசியுள்ளனர். அந்த தகவலை மக்களிடம் பரப்பியுள்ளனர். அதன்பின் மக்கள் காடுகளை சுத்தம் செய்து காசுகளை பொறுக்கியுள்ளனர். இப்படித் தான் இந்த பாதை உருவான வரலாறுகள் கூறப்படுகிறது.

அகல ரயில் பாதை
இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ரயில் பாதையில் கொல்லம் முதல் விருதுநகர் வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக சுமார் ரூ.520 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக விருதுநகர் முதல் தென்காசி வரையிலும், இரண்டாம் கட்டமாக கொல்லம் முதல் புனலூர் வரையிலும், மூன்றாம் கட்டமாக நெல்லை முதல் தென்காசி வரையிலும், நான்காவது கட்டமாக செங்கோட்டை முதல் புனலூர் வரையிலும் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது.

கேரள அமைப்புகள் போராட்டம்
இப்பணி 2013ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கபடும் என்று அறிவிக்கப்பட்டது. கால தாமதமாக பணி தொடங்கப்பட்டதால் இதுவரை சுமார் 50 சதவிகித பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. இந்தநிலையில் சிறப்புமிக்க 13 கண் பாலத்தை புனரமைக்காமல் அப்படியே இருந்தது இருந்த படி அகல ரயில் பாதையை மாற்று வழியில் அமைத்திட வேண்டும் என்று கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

13 கண் பாலம் புனரமைப்பு நிறுத்தம்
ஏற்கனவே கடும் வேகத்தோடு பணிசெய்யும் ரயில்வே இந்த போராட்டம் காரணமாக 13 கண் பாலம் புனரமைக்கும் பணியை தவிர்த்து பிற பாலங்களை புனரமைக்கும் பணியை தீவீரப்படுத்தியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பாதையில் ரயில் இயக்கம் இன்னும் 5 ஆண்டுகள் கழித்து தான் தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது. வரும் ஜனவரி 20ம் தேதி இந்த பாதையில் ரயில்வே ஜெனரல் மேனேஜர் ஆய்வு செய்கிறார். அதன் பிறகு தான் 13 கண் பாலம் புனரமைக்கப்படுமா இல்லை புதிய பாலம் கட்டப்படுமா என்று தெரிய வரும்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications