செக்ஸ் தொல்லை: கணவரை வெட்டி எரிக்க முயன்ற பெண் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கணவரின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் மனைவியே சுத்தியால் அடித்து கொலை செய்து வெட்டி எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகனுடன் சேர்ந்து உடலை கண்டந்துண்டமாக வெட்டி எரிக்க முயன்றபோது இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருவல்லிக்கேணி பச்சையப்பன் தெருவைச் சேர்ந்தவர் மணி (வயது 65). இவர் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பெயர் பத்மாவதி (55). இவர்களுக்கு யுவராஜ் என்ற மகனும், தனலட்சும் என்ற மகளும் உண்டு.

மணிக்கு போதைப்பழக்கம் மட்டுமின்றி பெண்கள் சகவாசமும் உண்டு. மேலும் மனைவிக்கு அடிக்கடி செக்ஸ் தொல்லையும் கொடுத்து வந்தார். இதனால் பத்மாவதியும் யுவராஜூம் பலமுறை மணியை கண்டித்துள்ளனர். போதையில் மனைவியை அடித்து உதைத்ததோடு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

கணவரின் தொந்தரவு தாங்க முடியாமல் தவித்த பத்மாவதி, வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மணி வீட்டில் இருந்த போது அவரது தலையில், பின்னால் இருந்து சுத்தியலால் பலமாக அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அதிர்ச்சி அடைந்த பத்மாவதி உடனே கீழ்ப்பாக்கத்தில் வசிக்கும் தனது மகன் யுவராஜுக்கு தகவல் தெரிவித்தார். செல்போனில் அவர் கூறியபடி மணியின் உடலை 5 பகுதியாக வெட்டினார். பின்னர் அங்கு வந்த வெட்டிய பகுதிகளை பைகளில் போட்டார். வயிற்றுப் பகுதியில் வெட்டப்பட்ட 2 பாகங்களை பைகளில் திணிக்க முடியாததால், பின்னர் கடலில் வீசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அந்த பாகங்களை மட்டும் வீட்டிலேயே வைத்து விட்டனர்.

தலை உள்பட மற்ற பாகங்கள் வைக்கப்பட்ட 2 பைகளையும் எடுத்துக் கொண்டு மணலி அருகே எரிக்க திட்டமிட்டு மேட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர்.

திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, வெட்டப்பட்ட உடல் பாகங்களை கால்வாயின் அருகே ஒரு மறைவான இடத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க தொடங்கினார்கள். அப்போது அந்த வழியாக சென்றவர்கள், திடீரென்று கால்வாய் ஓரத்தில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் எரிக்கப்படுவதை பார்த்து, அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து மணலி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு வந்த எஸ்.ஐ பாரதி, பத்மாவதியையும், யுவராஜையும் கைது செய்து மணலி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில் கணவரை கொலை செய்து எரிக்க முயன்றதை ஒத்துக்கொண்டனர். அதன்பிறகு இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.

செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவரை மனைவியே கொலை செய்து, கூறு போட்டு எரிக்க முயன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+